இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் சவப்பெட்டிகளுக்கான செலவைக் குறைக்கும் நிமித்தம் கார்ட்போர்ட் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கல்கிஸ்ஸ நகர சபை.
இப்பெட்டிகளைப் பெறுவதற்கு 10,000 ரூபா போதுமானது எனவும் தற்சமயம் ஒவ்வொரு குடும்பமும் மரணமொன்றுக்கு 40,000 ரூபாவுக்கு அதிகமாக சவப்பெட்டிகளுக்கு செலவு செய்ய நேர்ந்துள்ளதாகவும் அதனைக் குறைக்கவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும் இவ்வாறு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நகர சபை சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
கொரோனா முதல் அலையின் போது பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினரே பாதிக்கப்பட்டிருந்தமையும் இதன் போது 'பெட்டி' விவகாரம் வறுமையான குடும்பங்களுக்கு பாரிய சிக்கலாக உருவெடுத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment