இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை தீவிரமானது எனவும் இது குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தற்போது நடப்பது அரசியல் யுத்தமில்லை மாறாக மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட போராட்டம் எனவும் தெரிவிக்கின்ற அவர், நாட்டில் வைத்தியசாலைகளில் கட்டில்கள் தட்டுப்பாடு, ஒக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் நிலைமை மோசமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது அரசின் பெயரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமில்லையெனவும் விளக்கியுள்ள அவர், அரசியல் யாப்புக்கமைவாக மக்களின் நலனை முதன்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு அமைச்சரவைக்கு இருப்பதாகவும் அதற்கேற்ப காத்திரமான முடிவுகளை அமைச்சரவை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment