புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்ற கவுன்சில் அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்சமயம் பதில் சட்டமா அதிபராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இம்மாத இறுதியோடு முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment