இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் அங்கிருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், இத்தடை அமுலில் இருக்கும் எனவும் நிலைமை சீரானதும் மீளாய்வு செய்யப்படும் எனவும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் நிலைமை மோசமடைந்துள்ளதுடன் தினசரி லட்சக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் 3980 மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை புதன் கிழமையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 412,000 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment