மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத இதயமற்ற ஆட்சி செய்ய முடியாது என்பதை நன்குணர்ந்து, தான் அமர்ந்திருக்கும் பல்லக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச கீழிறங்கி வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அநுர குமார திசாநாயக்க.
கொரோனா சூழ்நிலையை இராணுவ சிந்தனையில் கட்டுப்படுத்த முனைந்ததன் ஊடாக இன்று மக்கள் பெருமளவு உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவத்துறை நிபுணர்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்படாமல் இந்த சூழ்நிலைக்கு உள்நாட்டில் தீர்வு காண முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த திட்டம் முற்றாகப் பிழைத்து விட்டதாக அநுர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment