ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பிலான சிக்கல் மீண்டும் எழுந்துள்ளது.
பிரித்தானிய பிரஜையான டயானா, சட்டவிரோதமாக இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் விசாரணையின் போது தனது விண்ணப்பப் படிவத்திலும் உண்மையான தகவலை அவர் இணைக்கவில்லையென்று வழக்கு தொடுனர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் கீதா குமாரசிங்கவும் இது போன்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் சமகி ஜன பல வேகய தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் பெற்று ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள டயானா தற்போது இவ்வாறு ஒரு பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment