கொலைக் கலாச்சாரத்தை அரசு நிறுத்த வேண்டும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Thursday, 13 May 2021

கொலைக் கலாச்சாரத்தை அரசு நிறுத்த வேண்டும்: சஜித்



குற்றவாளிகளை சட்டரீதியாக தண்டிப்பதற்குப் பதிலாக நினைத்த விதத்தில் கொலை செய்யும் கலாச்சாரத்தை அரசு கை விட வேண்டும் என தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


பிரபல பாதாள உலக பேர்வழிகள் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்பட்டு வருவது அரசின் அநீதியான நடவடிக்கையெனவும் நீதித்துறையை இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் ஒரு பாசிச இயக்கம் போன்று நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment