கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் மாலபேயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் - மனைவி மற்றும் கணவனின் சகோதரி ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மூவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மூவரும் உயிரிழந்துள்ள அதேவேளை நேற்றைய தினம் 14 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment