நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக சிங்கள வானொலியொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன், தனக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பி வைத்துள்ளதுடன், அவரது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment