இந்தியாவிலிருந்து ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெறும் முயற்சி தோல்வியடைந்தாலும் வேறு நாகளிலிருந்து அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிறார் அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே.
இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலையில் அங்கிருந்து ஆறு லட்சம் தடுப்பூசிகளைப் பெறுவது சாத்தியமற்றதாக உள்ளதால் வேறு நாடுகளிலிருந்தாவது அதனைப் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
சீனாவின் தடுப்பூசிகள் இலங்கைக்குத் தாராளமாகக் கிடைத்துள்ள போதிலம் அவற்றை உபயோகிப்பதற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்னும் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment