அவசர தேவைகள் நிமித்தம் சீனாவின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரமளித்துள்ளது.
Sinopharm என அறியப்படும் குறித்த வகை தடுப்பூசிகளை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த போதிலும் உலக சுகாதார அமைப்பின் அனுமதியின்றி உபயோகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது கையிருப்பில் இருக்கும் ஆறு லட்சம் தடுப்பூசிகளை உபயோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை பெறுவது கடினம் என கொரோனா தடுப்பு விசேட பிரிவின் பொறுப்பாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment