தான் வழங்கும் பரிந்துரைச் சீட்டைக் கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என நேற்றைய தினம் அடாவடியில் ஈடுபட்ட மொரட்டுவ மேயர் லால் பெர்னான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுமுல்ல பகுதியில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் வைத்தே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்ட குறித்த நபர், சுகாதார அதிகாரிகளை மிரட்டியிருந்ததோடு தனது பரிந்துரைச் சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்க வேண்டும் என ஆக்ரோஷமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் பொலிசில் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment