மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நிறைவுக் கட்டத்தையடைந்ததும் மேலும் மூன்று மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விளக்கமளித்துள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
அவரது விளக்கத்தின் படி, கண்டி - குருநாகல் மற்றும் ரத்னபுரி மாவட்டங்களிலேயே அடுத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் 61,000 பேருக்கு சீன தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமையும் ஒரு மில்லியனுக்கு அதிகமானோருக்கு இது வரை நாட்டில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும், தற்சமயம் இராணுவத்தினரும் இதில் ஈடுபட்டுள்ளதால் நாளொன்றுக்கு அதிகமானோர் தடுப்பூசி பெற்று வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment