பாதாள உலக பேர்வழி கொஸ்கொட தாரக பொலிசாரினால் இன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்த குறித்த நபரை மீரிகம பகுதியில் விசேட நடவடிக்கையொன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு குறித்த நபர் பொலிசாரின் ஆயுதத்தைப் பெற்று தாக்குதல் நடாத்த முனைந்ததாகவும் 'விளக்கம்' அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல பாதாள உலக பேர்வழிகள் இவ்வாறு விசேட நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் இடத்தில் கொலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment