சஹ்ரானின் நேரடி கட்டளையில் 2018 டிசம்பர் முதல் தீவிரவாத போதனை வகுப்புகளை நடாத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மாவனல்லை - ஹெம்மாத்தகமயைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவரை நேற்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகளில் குறித்த நபர் சஹ்ரானின் தீவிரவாத கொள்கைகளை பாடசாலை மாணவர்களுக்கு போதித்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment