தடுப்பூசி தட்டுப்பாடு வராது: இராணுவ தளபதி - sonakar.com

Post Top Ad

Thursday, 13 May 2021

தடுப்பூசி தட்டுப்பாடு வராது: இராணுவ தளபதி

 


இலங்கையில் தடுப்பூசி தட்டுப்பாடு வரும் என அச்சம் கொள்ளத் தேவையில்லையென தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.


ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் தற்போது உபயோகிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான தட்டுப்பாடு இல்லையென அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, ஏலவே ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் முதல் சுற்றைப் பெற்றவர்கள் ஏனைய தடுப்பூசியை கலப்பதால் பிரச்சினையில்லையென உதய கம்மன்பில தெரிவிக்கிறார்.


இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட, வேறு எதுவித நோய்களும் இல்லாதவர்களுக்கு சீன தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment