இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் தற்சமயம் வைத்தியசாலை கட்டில்களில் 90 வீதம் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
அதேபோன்று அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 50 வீதம் கொரோனா தொற்றாளர்களே இடம் பிடித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment