இன்று முதல் இலங்கை வரும் விமானங்களில் ஆகக்கூடியது 75 பேரே பயணிக்க முடியும் என கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 14 நாட்களுக்கு இது அமுலில் இருக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய தினங்களில் தினசரி ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்ற அதேவேளை அதில் சிறு தொகுதியினர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment