கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் மட்டக்களப்பு, அம்பாறை, காலி, நுவரெலியா, குருநாகல், கம்பஹா, திருகோணமலை மாவட்டங்களில் 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காணப்படுகிறது. இப்பின்னணியில் ஆயிரக்கணக்கானோருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகின்றது.
அண்மைய தினங்களாக தினசரி 2000 க்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் இரவு 11 - காலை 4 மணி வரையிலான போக்குவரத்து கட்டுப்பாடு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment