ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களது விசாரணைகள் மாத்திரமே முழுமையாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 'ஏ' வகைக்குட்படுத்தப்பட்டுள்ள மேலும் 42 பேரது விசாரணைகளை பொலிசார் முடித்து விட்டனரா என சட்டமா அதிபர் அலுவலகம் பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளது.
ஏனையோர் தொடர்பிலான விசாரணைகள் பற்றியும் பொலிசாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ள அதேவேளை, ரிசாத் பதியுதீன், அவரது சகோதரர், அசாத் சாலி உட்பட 702 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் பொலிசார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment