போக்குவரத்து தடையினால் பாதிக்கப்பட்டு வருவாய் இழந்துள்ளவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.
தீவிர கொரோனா தொற்றின் பின்னணியில் நாடளாவிய போக்குவரத்து அமுலில் உள்ளதால் பல இடங்களில் மக்கள் வருவாய் இன்றித் தவிப்பதாகவும் இந்நிலையில் அதனை ஈடு செய்ய மீண்டும் 5000 ரூபா திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் 5000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment