தமது மஞ்சள் தேவைகளை சொந்த வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நிமித்தம் ஒரு குடும்பத்துக்கு 5 மஞ்சள் கன்றுகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
மஞ்சள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து பொது மக்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
15 லட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு மஞ்சள் கன்றுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment