இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்தது முதல் இதுவரை ஓட்டமாவடி, மஜ்மா நகரில் 322 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதில் 298 முஸ்லிம்கள், 11 இந்துக்கள், 8 கிறிஸ்தவர்கள்,3 பௌத்தர்கள் மற்றும் நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரது உடலங்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியினை பயன்படுத்தி கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை காட்டி சிலர் பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறிவிடப்படவில்லை. அவ்வாறு யாருக்கும் பணம் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை பிரதேச சபைக்கு தெரியப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment