கொரோனா மூன்றாவது அலைக்கு அரசாங்கம் தயார் நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்ச ர் பிரசன்ன ரணதுங்க.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளதுடன் தினசரி 1000க் கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். தற்சமயம், 13824 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை பல இடங்களில் தொற்றாளர்கள் வீடுகளில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதிருப்போர் 1906 என்ற தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பல இடங்களில் வைத்தியசாலைகளில் வசதிப் பற்றாக்குறை பற்றியும் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.
எனினும், அரசாங்கம் மூன்றாவது அலைக்குத் தயாராகவே இருப்பதாக பிரசன்ன தெரிவிக்கின்றமையும் நேற்றைய தினமும் 9 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மரண எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment