நேற்றைய தினம் இலங்கையில் 26 பேரது மரணங்கள் கொரோனா மரண பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
8,9 மற்றும் 10ம் திகதிகளின் மரணங்களே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளின் ஆகக்கூடிய மரண எண்ணிக்கையாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
தற்சமயம், 22092 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஜுலை மாதத்துக்குள் தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment