இன்றைய தினம் (15) இலங்கையில் 2371 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22330 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியாக அண்மைய நாட்களாக தினசரி 2000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் அறிகுறியற்ற தொற்றாளர்களை வீடுகளிலேயே தங்க வைக்கப் போவதாகவும் அமைச்சர் சுதர்ஷனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment