நேற்றைய தினம் (15) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோர் பட்டியலில் 20 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் 60 முதல் 87 வயதான சிரேஷ்ட பிரஜைகளாவர். அண்மைய தினங்களில் சிரேஷ்ட பிரஜைகளே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 7ம் திகதி முதல் நேற்று வரையான பலரின் மரணங்கள் நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தடுப்பூசி வழங்கலில் சிரேஷ்ட பிரஜைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment