இலங்கையில் ஒரே தினத்தில் அதிக தொற்றாளர்கள் பதிவான நாளாக இன்று (5) காணப்படுகிறது. புதிதாக இன்றைய தினம் 1939 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 117529 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 100075 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இதுவரை 720 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 16734 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
கொரோனா பரவலின் தீவிரம் குறித்து பொது மக்களிடையே போதிய அவதானமில்லையென தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment