கடந்த ஒரு வாரத்திற்குள்ளான இஸ்ரேலிய தாக்குதலில் 140 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இன்றைய தினம் ஊடகங்கள் மையம் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றையும் தகர்த்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, ஹமாஸ் ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட காஸா - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து தொடர்ந்தும் மக்கள் வெளியேறு வரும் அதேவேளை, சண்டையின் உக்கிரத்தைக் குறைக்கும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. அத்துடன், பலஸ்தீனிய தலைவர் அப்பாசிடம் அமெரிக்கா ஜனாதிபதி பைடன் இன்று தொலைபேசியில் உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment