வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தளர்த்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் இலங்கைப் பிரஜைகள், வெளிநாட்டுப் பிரஜைகள், இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் என அனைவரும் நாடு திரும்புகையில் 14 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையை மீறி உதயங்க வீரதுங்க உக்ரைனிலிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்ததன் பின்னர், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment