அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெல்வதற்கு 70 லட்சம் வாக்குகளைப் பெறக்கூடிய பாரிய கூட்டணியொன்று தேவைப்படுவதாக தெரிவிக்கிறார் ருவன் விஜேவர்தன.
அவ்வாறான ஒரு சக்தியால் மாத்திரமே அடுத்த தேர்தலை வெல்ல முடியும் எனவும் அதிலும் குறிப்பாக அக்கட்சியானது பௌத்த மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய வகையிலும், இதர வாக்குகளைப் பெறும் வகையிலும் அமைந்தாக வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களில் செயற்பாட்டார்களுடன் கூட்டங்கள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில், நுவரெலிய சந்திப்பில் வைத்து ருவன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment