ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே நாடாளுமன்றம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சித் தவிசாளர் வஜிர அபேவர்தன இத்தகவலை வெளியிட்டுள்ளதுடன் அடுத்த மாதத்துக்குள் ரணில் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்குவதில்லையென்ற கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை காலம் பின்பற்றி வந்த அதேவேளை கடந்த முறை தலைவர் ரணில் உட்பட அனைவருமே தோல்வியுற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment