எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலின் போது படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தீர்மானிக்கவும் முடியாத சூழ்நிலையில் கட்சித் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பணியாற்றுகிறார்.
இதேவேளை சமகி ஜன பல வேகய, மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து தமது தலைமையிலான பாரிய கூட்டணியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment