விஜேதாச ராஜபக்சவை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தொலைபேசியூடாக மிரட்டிய விவகாரம் அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், விஜேதாசவை மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் மிரட்டி - அடி பணிய வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
மக்களை இவ்வாறு அடிபணிய வைத்து சர்வாதிகாரத்தைத் திணிக்கும் போக்கை மாற்றியமைக்க மக்கள் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ள அவர், விஜேதாச போன்று யார் ஜனாதிபதியின் முடிவுகளை எதிர்த்துக் கருத்து வெளியிட்டாலும் அதற்கு ஜனாதிபதியும் அறிக்கையூடாகவோ அல்லது தனது ஊடக பிரிவூடாக விளக்கமளிக்க முடியும் எனவும் அதற்குப் பகரமாக விஜேதாசவோ வேறு தனி நபர்களையோ பொது மக்களையோ மிரட்டும் கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது எனவும் அநுர குமார மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வாழ்நாள் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஏதுவாக 18ம் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்தது போலவே, எதிர்க்கட்சியிலிருந்தும் கூட சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை மீண்டும் கொண்டு வருவதற்கான 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கையுயர்த்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment