ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் மேற்கொண்டு வருவதாகவும் யாரும் யாரையும் விரல் நீட்டுவதால் அவரைப் பிடித்து சிறையிலடைப்படற்கு சட்டத்தில் இடமில்லையெனவும் தெரிவிக்கிறார் நீதியமைச்சர்.
சட்டம் தன் கடமையைச் செய்து வருவதாகவும், அவசரகால சட்டம் அமுலில் இருந்தால் மாத்திரமே இராணுவத்தினர் தலையிட முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், பொலிசாரின் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்தும் சட்டமா அதிபர் அலுவலகமே ஒரு நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
இதை விடுத்து, சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் அறிக்கை விடுபவர்களை திருப்திப் படுத்த அவர்களால் சொல்லப்படுபவர்களை கைது செய்து சிறையிலடைக்க முடியாது என நீதியமைச்சர் தெரிவிக்கின்றமையும் அரசியல் இலாபத்துக்காக விசாரணை திசை திரும்பியுள்ளதாக கத்தோலிக்க சமூகம் விசனம் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment