வார இறுதியில் தேசிய அளவில் லொக்டவுன் எதுவும் அறிவிக்கப்படப் போவதில்லையென தெரிவித்துள்ளார் இராணுவ தளபதி.
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் லொக்டவுன் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இராணுவ தளபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
எனினும், பொது மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு பாரிய அளவிலான ஒன்று கூடல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment