கொரோனா பரவலின் பின்னணியில் இலங்கையிலிருந்து சவுதி அரேபியா வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிகத் தடை அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பங்களதேஷ், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருவதற்கும் இத்தடை அறிவித்துள்ளது.
சவுதி பிரஜைகள் மற்றும் இகாமா வைத்திருப்பவர்கள் நாடு திரும்புவதற்கு மூன்று தினங்கள் கால அவகாசம் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதன் பின்னர் இந்நாடுகளுக்குச் செல்லவோ, அங்கிருந்து வரவோ அல்லது கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்கு பயணித்தவர்களோ நாடு திரும்ப முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமான நிலையை எட்டியுள்ள அதேவேளை ஏலவே பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து வரவைத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment