ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த அவர், 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தவராவார்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்தியோகபூர்வமாக சபாநாயகர் நீக்கியதையடுத்து தற்போது சமகி ஜன பல வேகயவின் அஜித் மன்னப்பெரும அந்த இடத்தை நிரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment