துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று இரண்டாவது நாளாக பரிசீலித்து வரும் நிலையில், அங்கு அமுலுக்குக் கொண்டுவர முனையும் பொருளாதார திட்டத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சார்பில் ஆஜராகி வாதாடி வரும் விஜேதாச, இலங்கை அரசியல் யாப்புக்கும் இறையான்மைக்கும் எதிரான வகையில் துறைமுக நகர பரிபாலன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகிறார்.
இதேவேளை, பிரபாகரனுக்கு ஈழத்தைக் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை அவரும் இலங்கையர் ஆனால் சீனர்களுக்கு இலங்கையில் ஒரு பகுதியைக் கொடுப்பது ஆபத்தானது என தம்பர அமில தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment