முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் வீரரும் தேசிய பயிற்றுவிப்பாளருமாக கடமையாற்றிய நுவன் சொய்சாவுக்கு எதிராக ஆறு வருட கால தடை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கட் கவுன்சில்.
சூதாட்டம், முறைகேடுகளில் தான் ஈடுபட்டது மாத்திரமன்றி மற்றவர்களையும் ஊழலுக்குத் தூண்டியதாக நுவன் சொய்சாவுக்கு எதிரான தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அரங்கில் கொடிகட்டிப் பறந்த இலங்கை கிரிக்கட் அண்மைக்காலமாக பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்கித் திணறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டைய ஊழல் விசாரணையின் முடிவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment