ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தலைமையிலான பெரமுன அரசாங்கம் இல்லையென்றால் இலங்கையில் இந்தியாவை விட மோசமான நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்.
கடந்த அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலைக் கூட தவிர்க்க முடியாத வங்குரோத்து நிலையில் இருந்ததாகவும் அவ்வாறான ஆட்சியின் போது கொரோனா பெருந்தொற்று வந்திருந்தால் அது நாட்டை மிக மோசமாக பாதித்திருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 8 தினங்களுக்குள் இலங்கையில் எண்ணாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment