ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையோரைக் கைது செய்து விசாரிக்கும் படலம் தொடர்ந்து வருகின்ற நிலையில் சஹ்ரானுடைய 'பேச்சுக்களை' கேட்டதன் பின்னணியில் புதிதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சஹ்ரானின் மாமனாரும் உள்ளடக்கம் எனவும் குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் உள்ளடக்கம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் மிகவும் கச்சிதமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என அரசியல் மட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment