சீனர்களுக்காக தடுப்பூசி அனுப்பவில்லை: தூதரகம் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 1 April 2021

சீனர்களுக்காக தடுப்பூசி அனுப்பவில்லை: தூதரகம் விளக்கம்

 


இலங்கையில் வசிக்கும் சீனர்களின் நலன் கருதியே சீனா தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதாக வெளியாகியிருக்கும் விமர்சனங்களை மறுத்துள்ளது இலங்கையில் இயங்கும் சீன தூதரகம்.


இலங்கையில் 3000 - 4000 வரையிலான சீனர்களே இருப்பதாகவும் ஆறு லட்சம் தடுப்பூசி வழங்கப்படுவது உள்நாட்டவரின் பயன்பாட்டுக்காகவே  எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் சீனர்களுக்காக தடுப்பூசி அனுப்பப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானது என தூதரகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment