ஒலுவில் பகுதியில் மாணவர்களுக்கு தீவிரவாதம் போதித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதி முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டல் எனும் அடிப்படையில் குறித்த நபர்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் பற்றிய காணொளிகளைக் காட்டி, அதனூடாக உள்நாட்டில் ஆள் சேர்த்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியிலான தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment