எதிர்வரும் ஜுலை மாதம் வரை சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவை கைது செய்யப்வோவதில்லையென உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார் சட்டமா அதிபர்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் பின்னணியில் ஹரின் பெர்னான்டோவை கைது செய்ய எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்ததோடு வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் அடுத்த தவணை (ஜுலை) விசாரணை வரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment