இலங்கையில் 11 முஸ்லிம் அமைப்புகள் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்டு சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வமைப்புகளில் இணைந்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
SLTJ, CTJ, UTJ, ACTJ போன்ற பெயர்களுடன் இயங்கிய தவ்ஹீத் அமைப்புகள் உட்பட அண்மையில் உருவான சுப்பர் முஸ்லிம், பறகஹதெனிய ஜமாத் அன்சாரிஸ் (JASM) , தாருல் அதார், இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு (SLISM) , ஐ.எஸ், அல் கயீதா, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சேவ் த பேர்ள் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வமைப்புகளில் இணைந்திருப்பது, அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வது, தலைமைத்துவம் வழங்குவது, கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment