ஹரினை நலம் விசாரிக்கச் சென்ற சஜித் - sonakar.com

Post Top Ad

Friday, 23 April 2021

ஹரினை நலம் விசாரிக்கச் சென்ற சஜித்

 


தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஹரின் பெர்னான்டோவை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார் சமகி ஜனபல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.


நாடாளுமன்றில் பலத்த வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்த ஹரின், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் அவரை விசாரணைக்கு வருமாறு சி.ஐ.டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்நிலையில், ஹரின் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment