கொரோனா சுகாதார கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழா நடாத்திய குற்றச்சாட்டில் யாழ் இந்துக் கோயில் ஒன்றின் தலைவரும் செயலாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகக் கவசம் அணியாது பெருமளவு 'பக்தர்கள்' கலந்து கொண்டிருந்ததாகவும் பொது நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதை மீறி கடந்த ஞாயிறு தினம் இவ்விழா நடாத்தப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில் பல இடங்களில், சுகாதார விதிகளை மீறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment