ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் பின்னணியில் அண்மைய தினங்களாக பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கட்டாரிலிருந்து நாடு திரும்பியிருந்த இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, குறித்த நபர்கள் தீவிரவாத பிரச்சாரம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருட இறுதியில் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்களையே பொலிசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment