சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கம்பொல, கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்டனைக்குரிய குற்றச் செயலில் குறித்த நபர் ஈடுபட்டிருப்பதாகவும் கம்பொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் போலியான செய்திகளை பரப்பி வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment